கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகாலின் (Sakhalin) தீவி கரையோரம் ஒரு வித்தியாசமான கடல் உயிரினத்தின் சடலம் கரையொதுங்கியது. இது ஆழ்கடலில், டைனோசர் போன்ற விச்சித்திர ஆதிகால உயிரினங்கள் வாழ்வதற்கான சான்று என்று மக்கள் கூறிவந்தனர். அதற்கேற்ப, முதற்கட்ட சோதனையில், இந்த உயிரினம், மீன் அல்லது முதலை இனத்தை சேர்ந்ததல்ல என்று தெரிய வந்துள்ளது. இதனால் இது குறித்த வதந்தி உலகெங்கும் இணையத்தில் தீயாக பரவியது. இது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலத்து உயிரினம் என்று அப்பகுதி மக்களால் நம்பப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அப்பகுதி வழியாக சென்ற ராணுவ வீரர்கள் இதனை படம்பிடித்து, இது குறித்த மர்மத்தை உடைக்குமாறு அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதன் படி இந்த வினோத உயிரினத்தின் பல், தோல் எலும்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இவற்றின் முடிவுகள் 8 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு பெலூகா திமிங்கலத்தின் சடலம் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதன் மண்டையோடு தற்போதைய பெலூகா திமிங்கலத்துடன் ஒத்துப் போகாததால் இந்த 8 ஆண்டு குழப்பம் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இதன் உடல் எலும்புகளையும் திமிங்கலத்தின் உடல் எலும்புகளையும் ஒப்பிட்டு இது ஒரு பெலூகா திமிங்கலம் என்று நிரூபித்துள்ளனர்.
Tuesday, 3 March 2015
கரையொதுங்கியது டைனோசரா.? 8 ஆண்டுகளுக்குப் பின் தீர்ந்த மர்மம்
Tuesday, March 03, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment