Friday, 29 May 2015

எகிப்து நாட்டில் – கடலுக்கு அடியில் அரண்மனை! 1,600 ஆண்டுகள் பழையதாம்


எகிப்து நாட்டில், கடலுக்கு அடியில், 1,600
ஆண்டுகளுக்கு முன், புதையுண்டதாக
கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த
அரண்மனை, தற்போது கண்டுபிடிக்கப்ப
ட்டுள்ளது.
நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த
அரண்மனை புதைந்து விட்டதாக கூறுகின்றனர்
ஆராய்ச்சியாளர்கள்.
பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட்
தூண்களும், அரிய பொருட்களும் இதில்
அடக்கம்.
கிளியோபாட்ராவின் மகனின் சிலையும்,
கடவுள்களின் சிலைகளும் காணப்படுகிறதாம்.
இங்கு புதையல்களும் இருக்க வாய்ப்புள்ளதாக
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர்.
அரண்மனையில் வைக்கப்பட்ட பல பொருட்கள்,
வைத்தது வைத்தது போன்றே இருப்பது,
ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளது.

Monday, 11 May 2015

ஹரப்பா காலத்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு


ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூடுகள்
இந்தியாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான நாகரிகம் நிலவிய காலமான ஹரப்பா நாகரிக காலத்தைச் சேர்ந்த மனித எலும்புக் கூடுகள் நான்கை தோண்டியெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்த எலும்புக்கூடுகள் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
இரண்டு வயது வந்த ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகள் வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புக்கூடுகள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை டி.என்.ஏ (மரபணு) பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
ஹரப்பா நாகரிக கால மக்கள் குறித்த புதிய தகவல்களை இந்தக் கண்டுபிடிப்புகள் தரும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

Saturday, 21 March 2015

குளோனிங் மூலம் அழிந்து போன மம்மூத் யானை படிமங்களில் இருந்து புதிய மம்மூத் யானை உருவாக்கம்


    மம்மூத் இன ராட்சத யானைகள் 250,000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்தது. தற்போது இந்த யானைகள் அழிந்து விட்ட நிலையில், குளோனிங் செய்து இத்தகைய இனங்களை மீண்டும் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன் முதல் கட்டமாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த மம்மூத் இன ராட்சத யானையின் படிமங்களில் காணப்பட்ட எலும்பு மஜ்ஜை மாதிரிகளை ஆராய தொடங்கினர். தற்போது அந்த மாதிரியில் உள்ள டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, 3 March 2015

வரலாற்றுக்கு முந்தைய வியப்பளிக்கும் உயிரினங்கள் சில - இன்னும் Dinosaur( திநோசிர் ) கூட அதில் இல்லை

ஒரு சில விலங்குகள்  உள்ளன,அதலால் நீங்கள் ஒரு காட்டில் இயல்பு பயணம் செய்ய விரும்பமட்டிர் .உங்களுக்கு தெரியுமா? இப்போ உள்ள விங்குகளை எல்லாம் அப்போ வாழ்ந்த அந்த விலங்குடன் ஒப்பிடவே முடியாது . சிங்கம் ,புலி,கரடி, மற்றும் சுறாமீன் இவைகளெல்லாம் அதனுடைய விளையாட்டு பொருள்களாக இருக்கக்கூடும் .
அந்த வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் மண்ணையும் கடலையும் ஆட்சி செய்தது .ஏதேனும் விலங்குகள் அவைகளுடன் வந்து மோதினால் நிச்சயம் வருத்தப்படும் .

நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் அவைகள் இப்போது இல்லாதமைக்கு. 

1. Megalodon( மிகலுதன் )

பண்டைய அரக்கன்களில் இதுவே மிக பெரியதாக இருக்கக்கூடும் .

மாலுதன்  60 அடி நிலம் கொண்டைவையாக கணிக்கப்பட்டுள்ளது .

அதன் எடை 50 முதல் 100 டன் இருக்கும் . ஒப்பிட்டுபார்த்தால் , 

வெள்ளை சுறா 20 அடி நிலமே வளரக்கூடியது .

2. Megatherium (மிகதிரியன் )
இது சாதாரணமாகவே மிகப் பெரிய அரக்கன்,கொடிய சோம்பல் குணம் 
கொண்டது .வெறும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்தது .
திகிலூட்டும் இந்த  உயிரினம் நம் மூதாதையரோடு  பாதைகளை 
கடந்துவந்துள்ளது .


3. Quetzalcoatlus (குத்திரிகன் )
குத்திரிகன் மிகபெரிய பறக்கும் வாழ்ந்த பாலூட்டி, அதன் இறக்கைகள்
35 அடி இருக்கலாம் . அவைகள் 500 பவுண்ட்ஸ்  எடை இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்   .

4. Titanoboa (தித்தன் )


இது 2500 பவுண்ட்ஸ் எடையும் மற்றும் 40 அடி நிலமும் உடையது.இதுவரை இருந்த பாம்புகளில்  தித்தன் மிகபெரிய பாம்பு இனம் .2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனதற்கு இறைவனிடம் நன்றி
செலுத்துங்கள் .அதே 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான்
மிகலுதன் இனமும் அழிந்தது .

5. Mosasaurus (மொசரன்)
60 அடி முதலையை துடுப்புடன் அவைகளை கொண்டு தண்ணிரில்
நீந்த முதிந்தால் கற்பனை செய்து பாருங்கள் ?? புடிச்சிட்டேன்
அதான் மொசரன்.ஒரு வல்லமைமிக்க கிரிட்டாசியஸ் கால
வேட்டையாடும் பிராணி .


6. Gorgonops( கொர்கன் )
இந்த தீய வேகமாக வேட்டையாடி கொன்று தின்கின்ற விலங்கு 
Dinosaur( திநோசிர் ) களை அச்சுறுத்துவதாய் இருந்தது .அதன் 
செழுமைக்காலம்  சுமார் 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 
இருந்தது .அதன் அளவு பயங்கரமாக இல்லையென்றாலும் 
 (இந்த விலங்கு  நீளம் 10 அடி வரை வளர முடியும்),இது பெரிய பல 
வரிசைகளில்(வகைகளில் ) திகிலூட்டும் பற்கள் உள்ளது.

7. Phorusrhacidae ( போர்கோழி )

போர்கோழி

 இதை "பயங்கரவாத பறவை(Terror Bird)" என்றும் கூறுவர் .இந்த தெற்கு அமெரிக்கன் பிராணி 2.5 மில்லியன் ஆண்டுகள் முன்பே அழிந்து போயின .
நல்ல விசயமும் கூட - இது 10 அடி உயரம் வளரும் மற்றும்  ஒரு பிரம்மாண்டமான அலகு இருந்தது அதனால் நீங்கள் நிச்சயமாக
அருகே செல்ல  விரும்பமாட்டீர் .

8. Thalattoarchon(தலைதரக்கன் )இந்த 28 அடி நீண்ட பண்டைய கடல் வேட்டையாடும் பிராணி ,தனது பெரிய தாடைகள் பயன்படுத்தி இதற்க்கு சமமான திகிலூட்டும் இரையை கைப்பற்றி தின்னும் ஆற்றல் கொண்டது .

9. Sarcosuchus(சர்க்கானை)
சர்க்கானை , இது தான் இப்போ உள்ள முதலையின் தூரத்து உறவுமுறை .

40 அடி நிலம்  மற்றும் 8 டன் எடை கொண்டது .என்ன பயபுடுரமாதிரி 
இல்லையா ?அது உண்மையிலேயே இரவு உணவுக்கு Dinosaur( திநோசிர் )
 தான் சாப்பிடும் 

10. Liopleurodon (உறத்தான் )
உறத்தான் மிகபெரிய தாடைகளை கொண்டது மற்றும் 20 அடி நீல 
உடலமைப்பு கொண்ட  கெட்ட கனவு பிராணி . இந்த பிராணி 
உங்களை நீந்த அனுமதிக்காது .

மங்கோலியாவில் தவக்கோலத்தில் இறந்த புத்த துறவியின் மம்மி கண்டுபிடிப்பு


மங்கோலியா நாட்டில் 'மம்மி' முறையில் பாதுகாக்கப்பட்ட புத்த துறவியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாமரை நிலையில் அமர்ந்து யோகாசனம் செய்தபடி உயிர்நீத்த அந்த துறவியின் உடல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டதாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.  திபெத்திய புத்த துறவிகளிடையே இதுபோல் யோக நிலையில் தியானம் செய்தபடி உயிர் துறக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்ததால், இந்த துறவியும் திபெத்திய லாமாவின் சீடராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கால்நடையின் தோலால் சுற்றி ‘மம்மி’ முறையில் பாதுகாக்கப்பட்டிருந்த இந்த உடல் எத்தனை ஆண்டு காலம் பழமையானது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கரையொதுங்கியது டைனோசரா.? 8 ஆண்டுகளுக்குப் பின் தீர்ந்த மர்மம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகாலின் (Sakhalin) தீவி கரையோரம் ஒரு வித்தியாசமான கடல் உயிரினத்தின் சடலம் கரையொதுங்கியது. இது ஆழ்கடலில், டைனோசர் போன்ற விச்சித்திர ஆதிகால உயிரினங்கள் வாழ்வதற்கான சான்று என்று மக்கள் கூறிவந்தனர். அதற்கேற்ப, முதற்கட்ட சோதனையில், இந்த உயிரினம், மீன் அல்லது முதலை இனத்தை சேர்ந்ததல்ல என்று தெரிய வந்துள்ளது. இதனால் இது குறித்த வதந்தி உலகெங்கும் இணையத்தில் தீயாக பரவியது. இது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலத்து உயிரினம் என்று அப்பகுதி மக்களால் நம்பப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அப்பகுதி வழியாக சென்ற ராணுவ வீரர்கள் இதனை படம்பிடித்து, இது குறித்த மர்மத்தை உடைக்குமாறு அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதன் படி இந்த வினோத உயிரினத்தின் பல், தோல் எலும்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இவற்றின் முடிவுகள் 8 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு பெலூகா திமிங்கலத்தின் சடலம் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதன் மண்டையோடு தற்போதைய பெலூகா திமிங்கலத்துடன் ஒத்துப் போகாததால் இந்த 8 ஆண்டு குழப்பம் நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இதன் உடல் எலும்புகளையும் திமிங்கலத்தின் உடல் எலும்புகளையும் ஒப்பிட்டு இது ஒரு பெலூகா திமிங்கலம் என்று நிரூபித்துள்ளனர். 

Sunday, 1 March 2015

ஆச்சரியப்படும் 10 உண்மைகள்:


1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.
2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.
3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.
4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.
5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.
6. ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.
7. 67. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.
8. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வி­ன் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.
9. கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்..
10. வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்...!

 

© 2013 எச்சரிக்கை. All rights resevered. Designed by Templateism

Back To Top